உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி பலாத்காரம்; சிறுவன் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம்; சிறுவன் மீது போக்சோ

திட்டக்குடி : திட்டக்குடி அருகே 16வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.திட்டக்குடி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பள்ளி படிப்பை கைவிட்டவர்கள். கடந்த 4ம் தேதி காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். சிறுமியின் பெற்றோர் மகளைக் காணவில்லை என திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர்.போலீசார் விசாரணை நடத்தியதில், பெரம்பலுார் மாவட்டம் வேள்விமங்கலம் கிராமத்தில் இருவரும் தங்கியிருந்தது தெரிவந்தது. இருவரையும் திட்டக்குடி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் சிறுமியை, சிறுவன் பலாத்காரம் செய்தது உறுதியானதால், சிறுவன் மீது திட்டக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை