உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிமகன்களின் கூடாரமான கால்நடை மருந்தக கட்டடம்

குடிமகன்களின் கூடாரமான கால்நடை மருந்தக கட்டடம்

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் பழமையான கால்நடை மருந்தக கட்டடம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.பெண்ணாடம் மெய்கண்டார் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கால்நடை மருந்தகம் சொந்த கட்டடத்தில் துவங்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி உள்ள கட்டடம் 10 ஆண்டுகளுக்கு முன் பழுதாகி மழைநீர் கசிவதுடன், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, பழைய கட்டடம் அருகே கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் பழைய மருந்தக கட்டடம் பூட்டப்பட்டது. பயன்பாடின்றி உள்ள கட்டடத்தில் குடிமகன்கள் இரவு நேரங்களில் மது அருந்துவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.எனவே, பழைய கால்நடை மருந்தகத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !