உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே சுவாமி வீதியுலாவில் மோதிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.குமராட்சி அடுத்த தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 23; இவரது தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில், 22; தரப்பினருக்கும், செல்லியம்மன் கோவில், மாசி மாத உற்சவத்தில், மெய்யாத்துாரில் சுவாமி வீதி உலா சென்றபோது, மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இருதரப்பினர் மீது குமராட்சி போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகன், 23; தனுஷ், 22; விக்னேஷ், 23; விமல், 22; ஆகியோரை கைது செய்தனர்.மேலும், அப்பகுதியில். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் ஆகியோர் காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் இருக்க அறிவுறுத்தினர்.அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை