உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.1.27 கோடியில் வகுப்பறை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.1.27 கோடியில் வகுப்பறை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

விருத்தாசலம்:தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1.27 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.விருத்தாசலம் அடுத்த தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 1.27 கோடி ரூபாயில் 6 வகுப்பறை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்ட நேற்று திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் சங்கீதா அருளரசன், துணைத் தலைவர் தென்றல், உதவி தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், நடராஜன் முன்னிலை வகித்தனர். விழாவில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரமுத்து, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி