| ADDED : ஆக 13, 2024 05:56 AM
கிள்ளை: போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிதம்பரம் அரசு கல்லுாரி மாணவர்களின்விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் துவக்கி வைத்தார். கல்லுாரியில் இருந்து துவங்கிய மாணவர்கள் ஊர்வலம், சி.முட்லுார் மண்டபம் வரை சென்று மீண்டும்கல்லுாரி வந்தடைந்தது.ஊர்வலத்தில், சப் இன்ஸ்பெக்டர்கள் குப்புசாமி, விவேக் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள்பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன் செய்திருந்தனர்.