உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காமராஜ் சிறப்பு பள்ளியில் நினைவரங்கம் திறப்பு விழா

காமராஜ் சிறப்பு பள்ளியில் நினைவரங்கம் திறப்பு விழா

சிதம்பரம் : சிதம்பரம், வயலுார் காமராஜ் இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் மறைந்த லட்சுமிகாந்தன் நினைவு அரங்க திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் அனிஷா மஞ்சினி, சிறப்பு பள்ளி தாளாளர் மனோன்மணி ஆகியோர் தலைமை தாங்கினர். வீனஸ் பள்ளி தாளாளர் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் ஓய்வு பெற்ற, வங்கி பொது மேலாளர் கண்ணன், ராஜேந்திரன் ஆகியோர் நினைவு அரங்கத்தைத் திறந்து வைத்து பேசினர்.நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கீதா, சுசித்ரா, ஜெனன்யா, பிச்சமுத்து, தியாகராஜன், மதிவாணன், சண்முகசுந்தரம், வணங்காமுடி, ஞானதேவன், வெங்கடாஜலபதி, சந்திரசேகரன், தர்பாரண்யன், கோகுல், லோகன், முருகன், வேலன், கோபால்சாமி, இளங்கோவன், காமராஜ் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ