உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளம் துார்வாரும் பணி துவக்கம்

குளம் துார்வாரும் பணி துவக்கம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பூவாலையில் குளம் துார்வாரும் பணி நடந்து வருகிறது.புதுச்சத்திரம் அடுத்த பூவாலை ஊராட்சியில், சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் இங்குள்ள குளத்தில் தண்ணீர் சேமித்து குளிப்பது, துணிதுவைத்தல், பாத்திரம் கழுவுதல், கால்நடைகள் தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட, அத்தியாவசியதேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் குளம் தூர்ந்து குறைந்தஅளவு, தண்ணீரை சேமித்து வைக்கும் நிலை இருந்தது. அதையொட்டி இப்பகுதி மக்கள்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, கனிம வளத்துறை சார்பில், சுமார் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, துார்வாரும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை