உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்தல் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க உத்தரவு

தேர்தல் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க உத்தரவு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இன்று நடக்கும் ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சியில் தவறாது பங்கேற்க வேண்டும் என, கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம் லோக்சபா தொகுதி ஓட்டுச் சாவடி மையங்களில் பணி செய்யும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று (18ம் தேதி) காலை 9:00 மணிக்கு நடக்கிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் கடந்த இரு பயிற்சி வகுப்புகள் நடந்த அதே இடத்தில் நடக்கிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க வரும் அலுவலர்கள் வருகை பதிவேடு மூலம் உறுதி செய்யப்படுவர். அதனால் அனைத்து பணி அலுவலர்கள் தவறாது பங்கேற்க வேண்டும். இவர்களுக்கு மண்டல அலுவலர்கள் மூலம், தேர்தல் நடத்துதல், ஓட்டுச்சாவடி விதிமுறைகள், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சி முடிந்த நிலையில் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி