உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத் சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் பள்ளியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம்.அந்த வகையில், நடப்பாண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்தவாரம் நடந்தது.இதில், வென்ற மாணவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் சிவநேசன் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் ஆனந்தபாஸ்கர் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ