உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் பணிநிறைவு

கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் பணிநிறைவு

கடலுார் : கடலுார் அடுத்த வரக்கால்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் மற்றும் செயலாளராக (பொறுப்பு) பணிபுரிந்த சம்பத்குமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சங்கீதா சிறப்புரையாற்றினார். அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சேகர், தொ.மு.ச., மாவட்ட செயலாளர் ராஜாராம், பில்லாலி ஊராட்சி தலைவர் ஸ்ரீராம், ஓய்வுபெற்ற பி.டி.ஓ., ராம்குமார், ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஹரிஹரன், செல்வராஜ், லோகநாதன், மாயக்கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், சம்பத்குமார் விற்பனையாளராக பணியில் சேர்ந்து 41 ஆண்டுகள் படிப்படியாக பதவி உயர்வு பெற்றதை கூறி, பாராட்டி கவுரவிக்கப்பட்டார். சம்பத்குமார் ஏற்புரையாற்றினார். காசாளர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி