உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை அரசு கல்லுாரியில் கவுன்சிலிங் துவங்கியது

விருதை அரசு கல்லுாரியில் கவுன்சிலிங் துவங்கியது

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கவுன்சிலிங் நேற்று துவங்கியது.கல்லுாரி திருவள்ளுவர் கலையரங்கில் நேற்று துவங்கிய கவுன்சிலிங், வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கான முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி.,யில் சான்று பெற்ற மாணவர்கள், சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் மகன், மகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கி நடத்தினார்.இதில், சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை நடந்தது. அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ