உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும்: கமிஷனர் அனு

கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும்: கமிஷனர் அனு

கடலுார்: கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும் என, புதிய கமிஷனர் அனு கூறினார்.கடலுார் மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட பின் நகராட்சி அந்தஸ்திலான கமிஷனர்களே பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.அப்போது அவர் கூறுகையில், கடடலுார் மாநகர மக்களின் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாநகராட்சியை துாய்மையாக மாற்ற பாடுபடுவேன். தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணியாற்றுவேன்.கடலுாரை சிறந்த மாநகராட்சியாக மாற்றுவதே எனது நோக்கம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என, தெரிவித்தார்.கடலுார் புதிய கமிஷனராக பொறுப்பேற்ற அனு, 2017 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, துாத்துக்குடியில் பயிற்சி கலெக்டராகவும், திண்டிவனத்தில் சப் கலெக்டராகவும், இறுதியாக சென்னையில் நிதித்துறையில் பணியாற்றியுள்ளார்.புதிய கமிஷனருக்கு, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர்கள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்