உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கடலுார்: ஆடி மாத அமாவாசையையொட்டி, கடலுார் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தமிழகத்தில் அமாவாசை தினங்களில், இறந்த முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இதில், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாத அமாவாசையான நேற்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் காலை முதல் அர்ச்சகர்கள் மூலம் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ