உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் மகள் ஆர்த்தி, 23; நர்சிங் முடித்து விட்டு, ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 21ம் தேதி பிரகாஷ் ஜவுளி கடையில் மகளை விட்டு வந்தார். ஆனால், அன்றிரவு வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் லலிதா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ