உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுப்பதிவு மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி

ஓட்டுப்பதிவு மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு மையங்களுக்கு பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது.கடலுார் லோக்சபா தொகுதி தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு மையங்களுக்கு அனுப்ப வேண்டிய பென்சில், பேனா, மெழுகுவர்த்தி, பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் கடலுார் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து நேற்று கடலுார் சட்டசபை தொகுதியில் உள்ள 227 ஓட்டுப்பதிவு மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்தது. இப்பணியை டி.ஆர்.ஓ., ராஜசேகரன் ஆய்வு செய்தார்.அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயா, தாசில்தார் பலராமன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை