உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும். பெண்ணாடத்தில் 60 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விருத்தாசலத்தில் 1977ல் நிறுவப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.விருத்தாசலம் நகர செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை