உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீராணம் ஏரியின் உபரி நீர் ெவள்ளாற்றில் ெவளியேற்றம்

வீராணம் ஏரியின் உபரி நீர் ெவள்ளாற்றில் ெவளியேற்றம்

சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் வினாடிக்கு 1,000 கன அடி நீர் வி.என்.எஸ்., மதகு வழியாக வௌ்ளாற்றில் ெவளியேற்றப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் கல்லணை வழியாக நேற்று முன்தினம் கீழணைக்கு வந்தடைந்தது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 2,500 கன அடி நீர் ் திறக்கப்பட்டது. வீராணம் ஏற்கனவே தண்ணீர் இருப்பு இருந்த நிலையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட 2,500 கன அடி நீரால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரிக்கு வந்த உபரி நீரில் ஆயிரம் கன அடியை லால்பேட்டை பொதுப்பணித்துறையினர் நேற்று பூதங்குடி வி.என்.எஸ்., மதகு வழியாக வெள்ளாற்றியில் ெவளியேற்றினர்.சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டிற்கு வந்த தண்ணீரை தேக்கி பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் தலைமையிலான குழுவினர், ஏ.டி.எஸ். மதகை திறந்து வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்காக 250 கனஅடி நீரை அனுப்பி வருகின்றனர். இதனை மிராளூர், உடையூர், அரியகோஷ்டி மதகுகள் வழியாக விசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை