நெய்வேலி: நெய்வேலியில் நடந்த 'மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ' மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திரா நகர் மக்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பட்டா வழங்கினார்.நெய்வேலி இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. குறிஞ்சிப்பாடி ஒன்றியம் இந்திரா நகர், கீழூர், வடக்கு மேலூர் ஆகிய ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.அதையடுத்து, பொதுமக்களுக்கு மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.எம்.எல்.ஏ., மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இந்திரா நகர் ஊராட்சியில் எம்.ஆர்.கே., சாலையில் கடந்த 40 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தனிப்பட்டா பிரச்னைக்கு நேற்று தீர்வு ஏற்பட்டு, அப்பகுதி மக்களிடம் பட்டாக்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன், டி.எஸ்.ஓ., ராஜீ, தாசில்தார் அசோகன், தி.மு.க., நிர்வாகிகள் குணசேகரன், வீர ராமச்சந்திரன் ஆனந்த ஜோதி, ஏழுமலை, ராஜேஷ், கோபு, பினுக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.