உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி

கடலுார்: கடலுார் மாவட்ட தடகள கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை, டி.எஸ்.பி., பிரபு துவக்கி வைத்தார். இதில், 14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட 4 பிரிவுகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மாநில, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுகின்றனர்.அப்போது, மாவட்ட தடகள கழகத் தலைவர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி.,யான ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ