கடலுார் : கடலுாரில் விவசாயிகள் தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சித் தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெகதீசன், சமூக சத்திரிய பேரவை இணைப் பொதுச் செயலாளர்கள் சுப்ராயலு, குமார் முன்னிலை வகித்தனர். கட்சி துணை பொதுச் செயலாளர்கள் சசிக்குமார், மணிகண்டன், மதியழகன், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு மண்டல செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.பின், பொன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:ஜனநாயகத்தை மீட்க, இந்தியாவை காக்க தி.மு.க., தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விவசாயிகள் தொழிலாளர் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. அதன்படி், கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், சிதம்பரம் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறோம். தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் ஜனநாயகத்தை காக்க முடியும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இதேபோன்று, காங்., தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. மத்திய பா.ஜ., அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது. பா.ஜ., ஆட்சியில் தொழிலாளர் நலன் சார்ந்த 18 வாரியங்கள் முடக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் நலவாரியங்கள் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.