உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., கொடி, பேனர்கள் போலீசார் அகற்றியதால் பரபரப்பு

தி.மு.க., கொடி, பேனர்கள் போலீசார் அகற்றியதால் பரபரப்பு

கடலுார், கடலுாரில் தி.மு.க., கொடிகள், பேனர்கள் போலீசாரால் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் நகரில் நேற்று அமைச்சர் உதயாநிதி, தி.மு.க., கூட்டணி கட்சி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி ரோட்டில் தேர்தல் விதிமுறைகள் மீறி தி.மு.க.,வினர் கட்சிக் கொடி, பேனர்கள் அதிக அளவில் வைத்தனர்.நகரில் பிரசாரம் நடக்கும் இடத்தைவிட்டு மற்ற பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகள், பேனர்களை அகற்ற தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார், கட்சிக் கொடி, பேனர்களை அதிரடியாக அகற்றினர். இதனால் நகரில் தி.மு,க.,வினரிடையே பரபரப்பு நிலவியது.தி.மு.க.,வினர் தேர்தல் விதிமுறைகளை போலீசார் விளக்கி கூறிய பின் தி.மு.க.வினரே தங்கள் கட்சிக்கொடி, பேனர்களை அகற்றிக் கொண்டனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் நகரில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை