உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோஷ்டி பூசலில் சிக்காத தே.மு.தி.க., வேட்பாளர்

கோஷ்டி பூசலில் சிக்காத தே.மு.தி.க., வேட்பாளர்

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் கூட்டணி மற்றும் கோஷ்டி பூசலில் சிக்காமல், 'ஜரூர்' பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையே தொகுதியில் கடும் போட்டி உள்ளது.காங்., கட்சியில் பொதுவாக கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லை. கடலுார் தொகுதியில் உள்ளூர் நிர்வாகிகளை காங்., வேட்பாளர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, ஒரு கோஷ்டி இன்னும் தேர்தல் பணியாற்ற வராமல் ஒதுங்கியே உள்ளது. தி.மு.க., வில் வேளாண் அமைச்சர் பார்த்துக்கொள்வார் என விஷ்ணுபிரசாரத் மலைபோல் நம்பியுள்ளார். ஆனால், மாவட்டத்தில் தி.மு.க., கோஷ்டி பிரச்னை, பிரசாரத்தில் நன்றாகவே தெரிகிறது. வேட்பாளர் வசதி படைத்தவர் என்பதால், பண பலத்தை வைத்து அவர் கணக்கு போட்டுள்ளார்.பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் திரைப்படத்துறை இயக்குனராக இருந்ததால் அனைவருக்கும் நன்கு பரிச்சயம். இருந்தாலும் அரசியலில் அவர் புதுமுகம். கரங்களை உயர்த்தி கும்பிடு போடக்கூட பழக்கமில்லாதவராக உள்ளார். இவர் பிரசாரத்தில் பா.ஜ., மற்றும் பா.ம.க., நிர்வாகிகளை கட்டி இழுத்துச் செல்வதில் படாதபாடு பட்டு வருகிறார்.தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் எம்.எல்.ஏ., வாக இருந்தவர் என்பதால் அரசியலுக்கு புதிதல்ல. அவரது கட்சியிலும் 'பெரிசா' கோஷ்டி பூசல் கிடையாது. தே.மு.தி.க., வில் படைபலம் சொல்லும்படியாக இல்லை எனறாலும், அ.தி.மு.க., தோள் கொடுக்க களமிறியுள்ளது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் சம்பத், சொரத்துார் ராஜேந்திரன், அருண்மொழித்தேவன் ஆகிய மூவரும், கட்சிக்குள் ஆயிரம் பிரச்னை இருந்தாலும், அத்தனையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தோழமை கட்சி தே.மு.தி.க., வேட்பாளருக்கு பிரசாரம் செய்வதில் தீவிரமாக உள்ளனர். இதனால் கடலுார் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் மக்கள் மத்தியில் பேசப்படும் வேட்பாளராக வலம் வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை