| ADDED : ஜூன் 10, 2024 01:21 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 971 பேர், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு எழுதினர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத, கடலுார் மாவட்டத்தில், 95 ஆயிரத்து 248 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இத்தேர்வில், 74 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதினர். 20 ஆயிரத்து 277 பேர் ஆப்செண்ட் ஆகினர். தேர்வு பணியில் 54 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, வினாத்தாளை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்றனர். 32 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக, தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் காலை 7:30 மணிக்கே வந்து காத்திருந்தனர். பின், சோதனை செய்யப்பட்டு 8:30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் வரவேண்டும் எனவும், வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடலுார் மாவட்டத்தில் சில தேர்வு மையங்களுக்கு 9:00 மணிக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு எழுத வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வர்கள், போலீசார் மற்றும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அவர்கள் அங்கிருந்து தேர்வு எழுதாமல் திரும்பி சென்றனர். இச்சம்பத்தால் சில தேர்வு மையங்களில்