உள்ளூர் செய்திகள்

கண்கள் தானம்

புவனகிரி : இறந்த மூன்று மூதாட்டிகளின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.புவனகிரி முத்தாச்சிப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி லலிதாஅம்மாள்,87; கீரப்பாளையம் கீழநத்தம் தெற்குத் தெரு சண்முகசுந்தரம் மனைவி கோமளவள்ளி,86; புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமாரசாமி மனைவி சாவித்திரி், 87; ஆகியோர் உடல் நலக்குறைவு காரணத்தால் இறந்தனர். இறவர்களின் குடும்பத்தினர் கண்களை தானமாக வழங்க முன்வந்தனர். அதன் பேரில் புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், மகாலிங்கம், சேதுராமன் உள்ளிட்டோர், சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் ராமச்சந்திரன் ஒத்துழைப்புடன் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !