உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வங்கிகளின் பெயரில் வரும் ஆப்களை கிளிக் செய்யாதீர்

வங்கிகளின் பெயரில் வரும் ஆப்களை கிளிக் செய்யாதீர்

கடலுார்: மொபைல் போன்களுக்கு, வங்கிகளின் பெயரில் வரும் 'ஆப்'களை கிளிக் செய்ய வேண்டாம் என, பொதுமக்களுக்கு கடலுார் எஸ்.பி,. அறிவுறுத்தி உள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் வாட்ஸ் ஆப் மூலம், எஸ்.பி.ஐ., யூனோ ரிவார்டு பாயிண்ட் ஏ.பி.கே., ஆப் போன்று, வங்கிகளின் லோகோவுடன் மெசேஜ் வருகிறது. அந்த 'ஆப்' களை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டாம். அதுபோன்ற ஆப்களில் உள்ளே சென்றால் உங்களது இண்டர்நெட், எஸ்.எம்.எஸ்.,-வாட்ஸ் ஆப் மற்றும் சோசியல் மீடியா கணக்குகளை, சைபர் க்ரைம் குற்றவாளிகளால் ேஹக் செய்வர். அதன் மூலம், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களுக்கு வரும் வங்கி ரிவார்டு பாயிண்ட் ஆப் லிங்குகளை கிளிக் செய்யாமல், அழித்துவிட வேண்டும். வேறு நபர்களுக்கு பகிரவும் வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை