மேலும் செய்திகள்
விடையாற்றி உற்சவம்
4 hour(s) ago
பால் வியாபாரி திடீர் மாயம் மனைவி போலீசில் புகார்
4 hour(s) ago
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சுறுசுறுப்பு
8 hour(s) ago
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலியே...
8 hour(s) ago
கடலுார் : மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கொடுக்கூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்,46; இவரது மகள் கவுசல்யாவை, 23; கடலுார் அடுத்த நாணமேடு கிராமத்தில் உள்ள தனது சகோதரி மகன் தினேஷ், 28; என்பவருக்கு 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார்.இந்நிலையில் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற கவுசல்யாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து, கடந்த 18 ம் தேதி, கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கவுசல்யா, படுக்கை அறையில் துாக்கில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ்குமார், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரெட்டிச்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago