உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பூர்: வேப்பூர் போலீசார் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கதிரவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள், போதைப்பொருள் விற்பனையை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முன்னதாக போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.போலீசார் நேரு, ஏழுமலை, ராஜூ, கலைராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல், வேப்பூரை சுற்றியுள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை