உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ராஜாராம் ஆய்வு 

டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ராஜாராம் ஆய்வு 

கடலுார்: கடலுார் எஸ்.பி., ராஜாராம், உட்கோட்ட டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பார்வையிட்டு, காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.டி.எஸ்.பி., பிரபு, இன்ஸ்பெக்டர்கள் புதுநகர் குருமூர்த்தி, திருப்பாதிரிப்புலியூர் கலைச்செல்வி, முதுநகர் ரேவதி, ரெட்டிச்சாவடி ராஜாராமன், போக்குவரத்து பிரிவு முத்துக்குமரன் உடனிருந்தனர்.நேற்று முன்தினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகைப்பட பிரிவிற்கு சென்று காவல்துறை புகைப்படம் சார்ந்த ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பவ இடத்திற்கு சென்று புகைப்படம், வீடியோ பதிவு மேற்கொள்ள வேண்டும் என, தலைமை காவலர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ