உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீனவர் வலையில் கிடைத்த துர்க்கையம்மன் கற்சிலை புவனகிரி அருகே பரபரப்பு

மீனவர் வலையில் கிடைத்த துர்க்கையம்மன் கற்சிலை புவனகிரி அருகே பரபரப்பு

புவனகிரி: புவனகிரி வெள்ளாற்றில் மீனவர் வலையில் கிடைத்த துர்க்கையம்மன் கற்சிலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், புவனகிரி வெள்ளாற்றில் அதேபகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று காலை மீன் பிடிக்க படகில் இருந்து வீசிய வலையில், கனமான பொருள் சிக்கியது. ஆற்றில் இறங்கி சென்று பார்த்தபோது, சாமி சிலை என்பது தெரியவந்தது.இதுகுறித்து தகவலின்பேரில் தாசில்தார் தனபதி மற்றும் ஆர்.ஐ., குகநந்தன், வி.ஏ.ஓ., மணிவாசகன் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிதம்பரம் தீயணைப்பு படையினர் சிலையை மீட்டதுடன், வேறு ஏதேனும் சிலை உள்ளதா என தேடிப்பார்த்தனர்.மீட்கப்பட்ட 3 அடி உயரம், 50 கிலோ எடையுள்ள பழமையான துர்கையம்மன் கற்சிலை, தாசில்தார் தனபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை