உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி ரோடு, நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வளாகத்தில்,' நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஆகியன சார்பில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் என்ற' முஸ்லிம் விஞ்ஞானி நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முபாரக் அலி' தலைமை தாங்கினார். செயலாளர் சேட்டு முகம்மது முன்னிலை வகித்தார்.இதில், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க உயர்கல்வி ஆலோசகர் முகமது இஸ்மாயில், அறிவியல் தொழில்நுட்ப துறை ஆராய்ச்சியாளர் முகமது அனஸ் ஆகியோர், மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் மற்றும் நுழைவு தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை வழங்கினர்.இதில், ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.பொருளாளர் முகமது அப்துல்லா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை