உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெடிலம் ஆற்று கரையில் ஆக்கிரமிப்பு நடுவீரப்பட்டு விவசாயிகள் அவதி

கெடிலம் ஆற்று கரையில் ஆக்கிரமிப்பு நடுவீரப்பட்டு விவசாயிகள் அவதி

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரையை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் அகலப்படுத்தப்பட்டது.பாலுார்-நடுவீரப்பட்டு சாலையிலிருந்து கெடிலம் ஆற்றை ஒட்டியே புதியதாக கரை கட்டப்பட்டது.இந்த கரையில் நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் ஏரிவரை எளிதில் சென்று வந்தனர்.இந்த கரை வழியாக அப்பகுதியில் விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கு தேவையான இடுபொருட்களை டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் எளிதில் எடுத்து சென்றனர். இந்த ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு ஒரு சில இடங்களில் விளைநிலங்களாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.குறிப்பாக சி.என்.பாளையம் சுடுகாடு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மற்ற விவசாயிகள் தங்களது நிலத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.ஆகையால் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றின் கரையை சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி