உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வைக்கோல் வைக்கும் குடோனாக மாறிய எறும்பூர் சேவை மையம்

வைக்கோல் வைக்கும் குடோனாக மாறிய எறும்பூர் சேவை மையம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சியி்ல் 13 லட்சம் மதிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சேவை மைய கட்டடம் பயன்பாடின்றி மாடுகளுக்கு வைக்கோல் வைக்கும் குடோனாக மாற்றியுள்ளனர்.புவனகிரி ஒன்றியம், எறும்பூர் ஊராட்சியில் கடந்த 2015-16ம் ஆண்டில் ஒன்றிய நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் சேவை மைய கட்டடம் ஊர் ஒதுக்குப்புறமாக அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அரசு பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் கட்டியதோடு இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டடம் சமுக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது.அதன்பிறகு ஊராட்சியில் அந்த கட்டடத்தை பராமரிப்பதற்கான எந்தவித முயற்சியும் எடுக்காததால் பாழடைந்து வருகிறது. கட்டடம் பாழடைந்து வருவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த பகுதி நபர் வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைக்கும் குடோனாக மாற்றியுள்ளார்.எனவே எதிர்காலங்களில் தனிநபர்கள் கட்டடத்தை உரிமை கொண்டாடும் முன்பாக ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த கட்டடத்தை ஊராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி