உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., செயற்குழு கூட்டம்

மா.கம்யூ., செயற்குழு கூட்டம்

கடலுார்: கடலுார் மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் சிறப்புரையாற்றினார்.இதில், . வீடு இல்லாத மக்களுக்கு ரூ. 5 லட்சம் செலவில் வீடு கட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, நகர செயலாளர்கள் அமர்நாத், உத்திராபதி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன், ஏழுமலை, அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை