உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயல் அலுவலர் ஆப்சென்ட் ; பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

செயல் அலுவலர் ஆப்சென்ட் ; பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

புவனகிரி : புவனகிரி பேரூராட்சி கூட்டம் நேற்று துவங்கிய நிலையில் செயல் அலுவலர் வராததால் உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருந்ததால் பேரூராட்சி கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று 28ம் தேதி நடத்த முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு சேர்மன் கந்தன், துணை சேர்மன் லலிதா மற்றும் கவுன்சிலர்கள் கூட்டர அரங்கிற்கு வந்தனர்.பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பொறுப்பில் உள்ள செயல் அலுவலர் கூட்டத்திற்கு வரவில்லை. மதியம் 12:30 மணி வரை செயல் அலுவலர் வராததால் பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் வரும் 2ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.கவுன்சிலர்கள் கூறுகையில், பேரூராட்சியில், நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் அடிப்படை பிரச்னைகளில் சுணக்கம் ஏற்படுகிறது. வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் பொதுமக்களிடத்தில் எங்களால் பதில் கூற முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி நிரந்தர செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி