உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நந்திமங்கலத்தில் நிழற்குடை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நந்திமங்கலத்தில் நிழற்குடை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம்: நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையைப் பயன்படுத்தி நந்திமங்கலம், வடகரை, அருகேரி கிராம மக்கள் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை போதிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், கிராம மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மழை, வெயில் காலங்களில் திறந்தவெளியில் நின்று பஸ் ஏறும் அவலம் உள்ளதால் பெண்கள், முதியோர்கள், சிறுவர்கள் கடும் அவதியடைகின்றனர்.எனவே, நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ