உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

நெய்வேலி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

கடலுார் : ய்வேலி அருகே சூப்பர் மார்க்கெட்டில், ரூ. 50 ஆயிரம் மதிப்பு காலாவதி பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில், அலுவலர்கள் நல்லதம்பி, சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன் ஆகியோர், நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் இயங்கிவரும் சூப்பர் மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, காலாவதியான தேன் பாட்டில்கள், ரவை மாவு பாக்கெட்டுகள், மசாலா பாக்கெட்டுகள், ஹார்லிக்ஸ், காபி தூள், நெய் ஜார்கள், காரவகை உணவு பொருட்கள், எண்ணெய் பாக்கட்டுகள் என 40 வகையான உணவுப் பொருட்கள் காலாவதியாகி விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, உணவு பாதுகாப்புத்துறையினர் காலாவதியான அனைத்து பொருள்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் மதிப்பு ரூபாய் 50 ஆயிரமாகும். இதுகுறித்து கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ