உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேனீக்கள் கொட்டியதால் விவசாயிகள் அச்சம்

தேனீக்கள் கொட்டியதால் விவசாயிகள் அச்சம்

நடுவீரப்பட்டு: விலங்கல்பட்டில் தேனீக்கள் தொல்லையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு ஏரிக்கரை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது.இந்த விவசாய நிலத்திற்க்கு பொதுமக்கள் ஏரிக்கரை வழியாக சென்றுவருகின்றனர்.இந்த வழியில் உள்ள கருமகாரிய கொட்டை பக்கத்தில் உள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடுகட்டி உள்ளது.நேற்று காலை இந்த வழியாக நிலத்திற்கு சென்ற விலங்கல்பட்டு சாமிநாதன்,குயிலன்,மணி,ஜெயபால்,ராயர் உள்ளிட்ட சிலர் தேனீக்கள் கடித்தது.இதனால் விவசாயிகள் நிலத்திற்கு செல்லவே அச்சப்பட்டு வருகின்றனர்.ஆகையால் மாவட்ட தீயணைப்ப துறை நிர்வாகம் மரத்தில் உள்ள தேனீக்களை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை