உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் குடிபிரியர்கள் அட்டகாசம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் குடிபிரியர்கள் அட்டகாசம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

விருத்தாசலம், : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு, கடலுார் விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாணண் விளைபொருட்களை விற்பனை செய்ய தினசரி வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், குடிமகன்கள் மதுஅருந்திய பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால், மார்க்கெட் கமிடிக்கு வரும் விவசாயிகள் முகம்சுளிக்கின்றனர். மேலும், பெண் விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அத்து மீறி நுழைந்து மதுஅருந்துவதை தடுக்க மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், விருத்தாசலம் போலீசார் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தினசரி ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ