உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழுதடைந்த குடிநீர் டேங்க் திருமலை அகரத்தில் அச்சம்

பழுதடைந்த குடிநீர் டேங்க் திருமலை அகரத்தில் அச்சம்

பெண்ணாடம்: திருமலை அகரத்தில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரம் 2வது வார்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி நாளடைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.முழு அளவு தண்ணீர் தேக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் வார்டு மக்கள் அவதியடைகின்றனர். மேலும், குடிநீர் தொட்டியின் சுழல் படிக்கட்டுகள் சேதமடைந்ததால், டேங்க் ஆபரேட்டர் குடிநீர் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய அச்சமடைகின்றனர். எனவே, திருமலை அகரத்தில் பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை