உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்து: நிவாரணம் வழங்கல்

தீ விபத்து: நிவாரணம் வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த மணிக்கொல்லை ஆர்.சி., தெருவை சேர்ந்தவர் ராணி, 60. இவரது, கூரை வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாண்டியன் எம்.எல்.ஏ., சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ், கிளைக்கழக மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை