உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படகு இன்ஜினில் விழுந்து மீனவர் காயம்

படகு இன்ஜினில் விழுந்து மீனவர் காயம்

புதுச்சத்திரம்: மீன்பிடிக்க செல்லும் போது, படகு இன்ஜின் மீது விழுந்து மீனவர் காயமடைந்தார்.புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்,53; மீனவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் பைபர் படகில் நேற்று மீன்பிடிக்க சாமியார்பேட்டை கடற்கரையில் இருந்து படகை கடலுக்குள் இழுத்துச் செல்ல முயன்றார்.அப்போது, எதிர்பாராத விதமாக படகில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் மீது தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் மேல் சிகிக்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை