உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன்பிடி தடைகாலம் இன்று முடிவு தயார் நிலையில் கடலுார் மீனவர்கள்

மீன்பிடி தடைகாலம் இன்று முடிவு தயார் நிலையில் கடலுார் மீனவர்கள்

கடலுார்: தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவதால், கடலுார் மீனவர்கள்கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மீன் வளம்பாதுகாக்கும் வகையில் கிழக்கு கடல் பகுதியில் ஏப்., 15ம் தேதி முதல் ஜூன்14 வரையில், 61 நாட்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை செய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம்,நல்லவாடு, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை,சொத்திக்குப்பம், சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிதடை காலம் காரணமாக யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளை கடலுார், கிள்ளை அன்னங்கோவில்உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகள் மற்றும் கடற்கரையோரகிராமங்களில்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மேலும், வலைகள் சீரமைப்புமற்றும் படகுகள் பழுதுபார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்று 14ம் தேதியுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைகிறது.இதனால், கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள்படகுகளுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.இதற்காக சமையல் பொருட்கள், மீன்களை பதப்படுத்த ஐஸ்கட்டி,டீசல்ஆகியவற்றை படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை