உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர் வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர்: வேப்பூர் வாரச்சந்தையில் ரூ. 5 கோடி்க்கு ஆடுகள் விற்பனையானது.கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்ரோட்டில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, ராமநாதபுரம், துாத்துக்குடி, மதுரை, திருக்கோவிலுார் பகுதி வியாபாரிகள் வெள்ளாடு, செம்மறி, மால் வகை ஆடுகள் விற்பனை செய்கின்றனர்.இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கேரளா பகுதிகளுக்கு இறைச்சிக்கு ஆடுகளை வாங்கி அனுப்பி வருகின்றனர். இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்கி வியாபாரிகளிடையே போட்டி நிலவியதால், ஒரு ஆடு அதிகப்பட்சமாக ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை