உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தங்க பரிமாற்ற புதிய திட்டம்: தனிஷ்க் ஜூவல்லரியில் அறிமுகம்

தங்க பரிமாற்ற புதிய திட்டம்: தனிஷ்க் ஜூவல்லரியில் அறிமுகம்

கடலுார்: கடலுார் தனிஷ்க் நகைக் கடையில் 100 சதவீதம் தங்க பரிமாற்றம் புதிய திட்டம் அறிமுக விழா நடந்தது.வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஜூவல்லரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள தனிஷ்க்கை ஆர்வத்துடன் விரும்பி தேர்வு செய்கின்றனர். தங்கம் விலை அதிகரிக்கும் வேளையில் தனிஷ்க் மாறி வரும் தங்க விலைகளுக்கு மத்தியில், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, 'கோல்ட் எக்சேஞ்ச் பாலிசி' வழங்குகிறது.வாடிக்கையாளர்களுக்கு கழிவே இல்லாமல் பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய வடிவமைப்பு கொண்ட புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இன்றைய நவீன மற்றும் அந்தந்த பிராந்திய வடிவமைப்புகளிலான ஏராளமான நகைகளை வழங்குகிறது.வெறும் தங்கத்தினால் ஆன, க்ளாஸ் குந்தன், குந்தன் போல்கி, ஒபன் போல்கி, பிஜேடபிள்யூஎஸ், வண்ணகற்கள் மற்றும் பல பிரிவு பரிமாற்ற திட்டத்தில் வாங்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை