உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் பள்ளி வேன் மோதி 11 பேர் காயம்

அரசு பஸ் பள்ளி வேன் மோதி 11 பேர் காயம்

பண்ருட்டி: பண்ருட்டி தனியார் பள்ளி வேன் மீது பஸ் மோதியதில் வேனில் வந்த 8 மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு கடலுார் சாலையில் இருந்து நேற்று காலை 8:40 மணிக்கு பள்ளி மினி பஸ் வந்துகொண்டிருந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை கடலுார் மெயின்ரோட்டில் வந்த போது எதிரே பண்ருட்டி- கடலுார் நோக்கிச் சென்ற அரசு டவுன்பஸ் நேருக்கு நேர் மோதியது.இதில் மினி பஸ்சில் சென்ற பள்ளி மாணவர்கள் ஷீமா, 8; ேஹமா,14; மனோஜ்குமார்,12 உட்பட 8 மாணவர்களும், டிரைவர் ரமேஷ், 43; அரசு பஸ் டிரைவர் மணிகண்டன்,50; பஸ்சில் பயணம் செய்த ஏ.பி.குப்பம் சேர்ந்த நாகம்மா, 60; உட்பட 11 பேர் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்தவர்கள், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ