உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் அரசு ஊழியர்்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பத்தில் அரசு ஊழியர்்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பாததால் விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டியுள்ளதால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைபடி உயர்வு, பறிக்கப்பட்ட சரண்டர் உரிமையை வழங்க வேண்டும்.சத்துணவு,அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள் ஆகியோரை வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்துக்கு மாற்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட இணை செயலாளர் பொற்செழியன்,உணவு பாதுகாப்பு அலவலர் ரவிச்சந்திரன்,துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன்,செந்தில்குமார்,பிரபாகரன்,டில்லிபாபு,செல்வம்,ரெஜினா,சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !