உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரீன் டெக் பள்ளி மாணவர்கள் சாதனை

கிரீன் டெக் பள்ளி மாணவர்கள் சாதனை

கடலுார் : கடலுார் கிரீன் டெக் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவி யுநேகாஸ்ரீ 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி ஹரிதா 570 பெற்று 2ம் இடம், ஹரிசிதா 566 பெற்று 3ம் இடம் பிடித்தனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று நுாறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கல்விக் குழும தலைவர் ராஜாமணி, தாளாளர் அய்யப்பன் பாராட்டினர்.நிகழ்ச்சியில் பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் நிஜூமுதீன், ஆலோசகர் ஆசைத்தம்பி, இயக்குனர்கள் உபைதுர் ரஹ்மான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி