உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி அறிவிப்பு பலகை

உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி அறிவிப்பு பலகை

கடலுார் : கடலுாரில், ஊர் வழிகாட்டி பலகை துருப்பிடித்து, உடைந்து விழும் நிலையில் உள்ளது.கடலுார் அண்ணா மேம்பாலம் சிக்னல் பகுதியில் மாநகராட்சி சார்பில் மெகா சைஸ், வழிகாட்டி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கடலுார் நகராட்சியாக இருந்தபோது வைக்கப்பட்ட இந்த அறிவிப்பு பலகையில், சில்வர் பீச் மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்லும் துாரத்திற்கான கி.மீ., மற்றும் மரம் நடுவோம், மழை பெறுவோம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.இந்த அறிவிப்பு பலகையில் வர்ணம் பூசி பராமரிக்கப்படாததால், துருப்பிடித்து, ஸ்டிக்கர் கிழிந்து காணப்படுகிறது. இதனால், கி.மீ., துாரம் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, அறிவிப்பு பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை