விருத்தாசலம்: புதுக்கூரைப்பேட்டை விவசாயிகளுக்கு தென்னையில் அதிக மகசூல் குறித்து வேளாண் மாணவிகள் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.வேப்பூர் அடுத்த ம.புடையூர் ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், விருத்தாசலத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.அவர்கள், புதுக்கூரைப் பேட்டை கிராமத்தில், தென்னை மரத்தில் மகசூல் அதிகரிப்பு, உர மேலாண்மை, ஊடுபயிர் பயிற்சி, பாலப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.கல்லுாரி முதல்வர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு பயிற்சியாளர்கள் சிவச்சந்திரன், வனிதாஸ்ரீ, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுந்தரவடிவு, திட்ட பொறுப்பாளர்கள் பால்ராஜ், சூரியகலா, நந்தினி, தமிழ், ஆசிரியர் சுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.அதில், தென்னை மரத்தின் வேர் வழியாக டி.என்.ஏ.யூ., டானிக் செலுத்துதல், பலாப்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கப் பயிற்சி நடந்தது. வேளாண் மாணவிகள் ஆர்த்தி, அபி, அபிராமி, அமலஇவாஞ்சலின், அர்ச்சனா, ஆர்த்தி, அருள் நிலா, பவிதா, பூமிகா, தீபா விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.