உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹோட்டல் பராக் திறப்பு விழா திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு

ஹோட்டல் பராக் திறப்பு விழா திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு

திட்டக்குடி, : துபாய் தொழிலதிபர் திட்டக்குடி கண்ணன் ரவியின் ஹோட்டல் பராக் திறப்பு விழாவில், திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.திட்டக்குடியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன்ரவியின் ஹோட்டல் பராக் திறப்புவிழா, துபாயில் நடந்தது. தி.மு.க., கதிர்ஆனந்த் எம்.பி., திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் சுந்தர்சி, நடிகைகள் ராதிகா சரத்குமார், கீர்த்திசுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.திறப்பு விழாவை தொடர்ந்து தொழிலதிபர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில், காங்., மாநில செயலாளர் அன்பரசு தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். கண்ணன்ரவி குழுமத்தை சேர்ந்த பெரம்பலுார் மதுரா டெய்ரி விஜயகுமார், கதிர்காமன், நாகராஜன், பாலாஜி, வெங்கடேசன், மணிவண்ணன், உத்ரா கார்த்திக், செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை